காதலியை கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகர்… சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகர் நவீன். ந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர், சமூக வலைதளங்களிலும் பிரபலமாகி வந்தார். சமீபத்தில் இதயத்தை திருடாதே சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது கண்ட நாள் மூலம் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் நவீனும், சன்டிவியின் நியூஸ் ரீடரான கண்மணிக்கும் இடையே காதல் மலர்ந்து கடந்த சில வருடஙகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். தனது அழகான தமிழ் உச்சரிப்பின் மூலம் பிரபலமான கண்மணி நவீனுடன் காதலில் தனக்னெ தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவர உடனடியாக அவர்களும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவீன் – கண்மணி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில் நவீனுக்கும், கண்மணிக்கும் இன்று உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். முன்னதாக நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

நவீன் – கண்மணி திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்மணியின் பிறந்தநாளை நவீன் கோலாகலமாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.