சோனியா மருத்துவமனையில் அனுமதி| Dinamalar

புதுடில்லி: கோவிட் வைரசால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காங்., கூறியுள்ளது.

காங்., தலைவர் சோனியாவிற்கு கடந்த 2ம் தேதி கோவிட் உறுதியானது. வீட்டிலேயே அவர் தனிமைபடுத்தி கொண்டார். தொடர்ந்து, அவரது மகள் பிரியங்காவிற்கும் கோவிட் உறுதியாகி இருந்தது.

இந்நிலையில், டில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவிட் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகமும், காங்கிரஸ் கட்சியும் விளக்கமளித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.