நிதி ஆண்டு 2021-22 வருமான வரி கணக்குத் தாக்கல்; யாருக்கு எந்தப் படிவம்?

டாக்டர் அபிஷேக் முரளி, ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்

நிதி ஆண்டு (Financial Year – FY) 2021-22 முடிந்து, வரி கணக்குத் தாக்கலுக்கான மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year) 2022-23 ஆரம்பித்துவிட்டது.

வருமான வரி கணக்கு

மத்திய நேரடி வரிகள் வாரியமும் (Central Board of Direct Taxes – CBDT) வருமான வரி கணக்குத் தாக்கலுக்கான படிவங்களை (Income Tax Return Form) அறிவித்துவிட்டது.

யார் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்?

ஒரு தனிநபரின் கிராஸ் மொத்த வருமானம் (Gross Total Income), நிதி ஆண்டில் ரூ. 2.5 லட்சத்தை தாண்டுக்கும் போது அவர் கட்டாயம் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இங்கே கிராஸ் மொத்த வருமானம் என்பது சம்பளம், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி, டிவிடென்ட் வருமானம், மூலதன ஆதாயம் எல்லாம் சேர்ந்ததாகும்.

டாக்டர் அபிஷேக் முரளி, ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்

யாருக்கு எந்தப் படிவம்..?

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கு ITR 1 தொடங்கி ITR 7 வரை மொத்தம் ஏழு படிவங்கள் உள்ளன. இந்தப் படிவங்களில் எதை யார் பயன்படுத்த வேண்டும் என சிபிடிடி அறிவித்துள்ளது. கூடவே யார் எந்த படிவத்தை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவித்திருக்கிறது.

சரியான ஐடிஆர் படிவத்தை பயன்படுத்தவில்லை என்றால், வரிக் கணக்கு குறைபாடுள்ள வரிக் கணக்குத் தாக்கல் (Defective return) எனப்படும்.

ஐ.டி.ஆர் – 1 சஹஜ் (ITR-1 SAHAJ)

யார் பயன்படுத்த வேண்டும்?

* சம்பளம் / பென்ஷன் வருமானம் கொண்ட இந்தியர்கள்

* ஒரே ஒரு வீடு மூலம் வாடகை வருமானம் மற்றும் வட்டி வருமானம் போன்ற இதர வருமானம் கொண்டவர்கள்

* விவசாய வருமானம் ரூ. 5,000 வரை

* அனைத்து வருமானங்களும் சேர்ந்து, நிதி ஆண்டில் ரூ. 50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

* மேலும் வரிதாரரின் துணைவர் (கணவர் / மனைவி), பிள்ளைகளின் வருமானத்தை இணைத்தல் (Clubbing of Income) இருந்தால்.

வரி கணக்கு

யார் பயன்படுத்த முடியாது?

* வெளிநாட்டு வாழ் இந்தியர் (NRI)

* இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் (HUF)

* நிதி ஆண்டில் ரூ. 50 லட்சத்துக்கு மேல் உள்ள இந்தியர்கள்

* நிறுவனம் ஒன்றின் இயக்குநர் (Director)

* பட்டிலிடப்படாத நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்கள்

* வீட்டுக் கடனை திரும்பச் செலுத்தி வரும் நிலையில் முந்தைய ஆண்டு வட்டிக்கான வரிக் கழிவில் ரூ. 2 லட்சத்துக்கு மேற்படும் தொகையை அடுத்து வரும் ஆண்டுகளுக்கு கொண்டு செல்பவர்கள்

* ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலுருந்து வாடகை வருமானம், மூலதன ஆதாயம் உள்ள இந்தியக் குடிமக்கள்

* லாட்டரி/ குதிரை பந்தயம் மூலம் கிடைத்த இதர வருமானம்

*இந்தியாவுக்கு வெளியே சொத்து இருந்தால்

ஐ.டி.ஆர் 2 யார் பயன்படுத்தலாம்?

* தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர்.

* சம்பளம் / பென்ஷன் வருமானம்

* ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருமானம்

* இதர வருமானங்கள் (லாட்டரி/ குதிரை பந்தயம் மூலம் கிடைத்த இதர வருமானம் போன்றவை)

* சொத்து (வீடு, மனை), நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்கள், தங்கம் மூலமான குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயங்கள்

* வெளிநாடுகளில் சொத்து மற்றும் வெளிநாட்டு நிறுவனப் பங்கு முதலீடு மூலமான வருமானம்

* விவசாய வருமானம் ரூ. 5,000-க்கு மேல்

* நிதி ஆண்டில் ரூ. 50 லட்சத்துக்கு மேல் மொத்த வருமானம் கொண்டவர்கள்

* நிறுவனத்தில் இயக்குநர்

* பட்டியலிடப்படாத நிறுவனப் பங்குகளில் முதலீடு

வரி கணக்கு தாக்கல் (சித்திரிப்பு படம்)

யார் பயன்படுத்த முடியாது?

வணிகம் மற்றும் நிபுணத்துவ (Profession) வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர்

ஐ.டி.ஆர் 3 யார் பயன்படுத்தலாம்?

வணிக வருமானம் மற்றும் நிபுணத்துவம் மூலமான வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர்.

யார் பயன்படுத்த முடியாது?

வணிக வருமானம் மற்றும் நிபுணத்துவம் மூலமான வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் அல்லாவதவர்கள்

ஐ.டி.ஆர் 4 (Sugam)

வணிக வருமானம் / நிபுணத்துவம் மூலமான வருமானத்துக்கு அனுமான அடிப்படையில் (Presumptive Basis) கணக்கிட்டு வரிக் கட்டுபவர்கள் இந்தப் படிவத்தை பயன்படுத்த வேண்டும்.

வருமான வரி கணக்குத் தாக்கல்

ஐ.டி.ஆர். 5

இந்தப் படிவத்தை கூட்டு நிறுவனங்கள் (Firms) பயன்படுத்த வேண்டும்.

ஐ.டி.ஆர். 6

கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தப் படிவத்தை பயன்படுத்த வேண்டும்.

ஐ.டி.ஆர். 7

வரி விலக்கு பெறும் என்ஜிஓக்கள், அறக்கட்டளைகள் (Trusts) இந்தப் படிவத்தை உபயோகப்படுத்த வேண்டும்.

இப்போது உங்களுக்கு யார் படிவத்தை பயன்படுத்த வேண்டும் என்பது தெளிவாக புரிந்திருக்கும்..

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.