இந்தக் கடலின் அடியில் அபாயகரமான குளம்: யார் நீந்தினாலும் மரணம்தான்!

விஞ்ஞானிகள் செங்கடலின் அடிப்பகுதியில் கண்டுபிடித்துள்ள அபாயகரமான குளத்தில் எந்த உயிரினம் நீந்தினாலும் அல்லது யார் நீந்தினாலும் மரணம்தான் என்று அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

மியாமி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செங்கடலின் அடிப்பகுதியில் உள்ள ஒரு அபாயகரமான கொடிய குளத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் யார் நீந்தினாலும் மரணம்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் படி, நீருக்கடியில் ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் மூலம் மேற்பரப்பில் இருந்து கடலுக்கு அடியில் 1.7 கிலோமீட்டர் தொலைவில் உப்புநீர் குளம் கண்டுபிடிக்கப்பட்டது. பத்து மணி நேர டைவிங்கின் கடைசி ஐந்து நிமிடங்களில் விஞ்ஞானிகள் இந்த கொடிய குளத்தை கண்டுபிடித்துள்ளனர்.

உப்புநீர் குளம் என்பது கடலோரத்தில் உள்ள ஒரு தாழ்வான அழுத்தம் மிக்க பகுதி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இது அதிக செறிவூட்டப்பட்ட உப்பு நீர் மற்றும் சுற்றியுள்ள கடலை விட உப்புத்தன்மை கொண்ட பிற இரசாயன கூறுகளால் நிரம்பி இருக்கும்.

கடலுக்கு அடியில் உள்ள இந்த குளங்கள் அதன் வழியாக நீந்தும் விலங்குகளை திகைக்க வைக்கும் அல்லது கொல்லும் மற்றும் உயிருடன் கொன்றுவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

முன்னணி ஆராய்ச்சியாளர் சாம் புர்கிஸ் இது குறித்து லைவ் சயின்ஸ் இணையதளத்திடம் கூறுகையில், “இந்த கொடிய குளங்களை பூமியின் மிகத் தீவிரமான சூழல்” என்று கூறினார். மேலும் “இந்த உப்புநீரில் வழிதவறிச் செல்லும் எந்த விலங்கும் சிக்கிக்கொள்ளும் அல்லது உடனடியாக கொல்லப்படும்” என்று சாம் புர்கிஸ் கூறினார்.

மேலும்ம், மீன், இறால் மற்றும் வாலை மீன்கள் ஆகியவை இந்த உப்புநீரை வேட்டையாட பயன்படுத்துவதாக சாம் புர்கிஸ் தெரிவித்தார். இந்த உயிரினங்கள் ஆபத்தான குளத்தின் அருகே கவனக்குறைவாக நீந்தி வரும் இந்த உயிரினங்கள் ஆபத்தான குளத்தின் அருகே கவனக்குறைவாக நீந்தி வரும் துரதிர்ஷ்டவசமான உயிரினங்களை உணவாக்க பதுங்கியிருப்பதாக அவர் விளக்கினார்.

கடலுக்கு அடியில் இத்தகைய உப்புநீர் குளங்களின் கண்டுபிடிப்பு, பூமியில் முதலில் கடல்கள் எவ்வாறு உருவானது என்பதைக் கண்டறிய விஞ்ஞானிகளுக்கு உதவும் என்று முன்னணி ஆராய்ச்சியாளர் கூறினார். உப்புநீரைக் குளங்கள் அதிக எண்ணிக்கையிலான நுண்ணுயிரிகளின் தாயகமாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருப்பதாக அவர் கூறினார். மேலும், இந்த கண்டுபிடிப்புகள் இன்றியமையாதவை என்று அவர் வலியுறுத்தினார். ஏனெனில், இதேபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் வேற்றுகிரக கிரகங்கள் எந்த உயிரினத்தையும் உருவாக்க முடியுமா என்பதை தீர்மானிக்க உதவும் என்று கூறினார்.

“பூமியில் வாழும் உயிரினங்களின் எல்லைகளை நாம் புரிந்து கொள்ளும் வரை, வேற்றுகிரக கிரகங்கள் ஏதவது உயிரினத்தை உருவாக்க முடியுமா எனபது தீர்மானிக்க கடினமாக இருக்கும்” என்று சாம் புர்கிஸ் கூறினார்.

செங்கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆபத்தான குளத்தில் எந்த உயிரினம் நீந்தினாலும் யார் நீந்தினாலும் மரணம்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறிய நிலையில், விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உப்புக் குளம் இதுவல்ல என்று நியூயார்க் போஸ்ட் செய்தித் தளம் தெரிவிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில், செங்கடல், மத்தியதரைக் கடல் மற்றும் மெக்சிகோ வளைகுடாவில் சில டஜன் கணக்கான கொடிய குளங்களை கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்ற தகவல் மேலும் மலைக்க வைக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.