அவர் மட்டும் தைவானுக்கு சென்றால், நடப்பதே வேறு: அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்த சீனா


அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் செல்ல திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து சீனா மிரட்டல் விடுத்துள்ளது.

நான்சி பெலோசி தமது பயணத்தைத் தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு அடுத்து அதிக அதிகாரம் கொண்ட ஒருவர் 1997க்கு பின்னர் தைவான் செல்வது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

அவர் மட்டும் தைவானுக்கு சென்றால், நடப்பதே வேறு: அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்த சீனா | Taiwan Visit Beijing Vows Consequences

மேலும், கடந்த வாரம் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ஜோ பைடன், பெலோசியின் இந்த பயணம் தொடர்பில் இராணுவத்தில் மாறுபட்ட கருத்து இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், பெலோசியின் பயணம் தொடர்பில் சீனா மிரட்டல் விடுத்துள்ளது தேவையற்றது என வெள்ளைமாளிகை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

அவர் மட்டும் தைவானுக்கு சென்றால், நடப்பதே வேறு: அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்த சீனா | Taiwan Visit Beijing Vows Consequences

இதனிடையே, தைவான் பயணம் தொடர்பில் பெலோசி இன்னமும் உறுதிப்படுத்தவில்லை எனவும், தைவான் தொடர்பில் அமெரிக்காவின் அணுகுமுறையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை எனவும் உள்விவகாரத்துறை அறிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.