இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

சென்னை : சூளைமேடு  சொக்கவேல் சுப்பிரமணியர் கோவில் சொத்துக்களுக்கான வாடகை பாக்கியை வசூலிக்க கோரி, இந்து அறநிலைத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று, சுகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், அறநிலை துறைக்கு ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், தனிநபர்களுக்கு எதிரான நடவடிக்கையை விரைவப்படுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று, சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு உண்டான காலதாமதத்திற்கு, அறநிலையத்துறை அதிகாரிகள் காரணம் தெரிவிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து உதவியாளர் வருத்தம் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கக்கப்படுகிறது. உதவி ஆணையர், இணை ஆணையருக்கு தலா ஐம்பதாயிரம் விதிக்கக்கப்படுகிறது.

இந்த அபராத தொகையை இரு வாரங்களில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.