PUBG போல, BGMI கேமுக்கும் ஆப்பு! ஏன்… எதற்காக… விளையாட வழி இருக்கா?

BGMI Ban in India: கேமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் Battlegrounds Mobile India (BGMI), இனி கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store), ஆப்பிள் ஆப் ஸ்டோர் (App Store) ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியாது.

ஒன்றிய அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த கேம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொபைல் கேம் தடை என்பது இந்தியாவில் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னதாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த பப்ஜி விளையாட்டுக்கு அரசு அதிரடியாக தடை விதித்தது நினைவுக்கூரத்தக்கது.

ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ள நிலையில், புதிய அவதாரத்தில் உள்ள BGMI விளையாட்டு, தடைசெய்யப்பட்ட கேமிங் செயலியான PUBG செய்வதையே செய்கிறது என்று புகார்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Asus Zenfone 9: கைக்குள்ள இருக்கும்; ஆனா ஏசஸ் சென்ஃபோன் 9 பவர் வேற லெவல்!

எனவே, அதன் அறிக்கை விசாரணைக்காக அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், பப்ஜிக்கு மறுபெயரிட்டு வெளியிடப்பட்ட BGMI மொபைல் விளையாட்டை தடை செய்ய இந்திய அரசு முடிவெடுத்தது. இது தொடர்பான சுற்றறிக்கை ஆப்களை பதிவிறக்க அனுமதிக்கும் அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இது கூகுள் ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இருந்து எந்த முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டது. உறக்கம் விழித்து ப்ளே ஸ்டோரில் கேமை தேடிய பயனர்கள் அதிர்போயினர் என்றே சொல்லலாம். அப்போது தான் செயலி தடை செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. தொழில்நுட்பச் சட்டம் 69ஏ (Section 69A) பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏன் BGMI தடை செய்யப்பட்டது?

இந்தியாவில் BGMI தடை செய்யப்படுவதற்கு தெளிவான காரணம் எதுவும் இல்லை. ஆனால், சமீபத்திய அறிக்கையின்படி, 16 வயது சிறுவன், PUBG போன்ற ஆன்லைன் கேமில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன் தாயை சுட்டுக் கொன்றுள்ளார்.

5G Auction: 1800 MHz அலைக்கற்றைக்கு கடும் போட்டி; விலையை சற்று உயர்த்திப்பிடித்த அரசு!

சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. PUBG தடைக்குப் பிறகு Krafton Inc சார்பில் BGMI விளையாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில மாற்றங்கள் இருந்தபோதிலும், இது PUBG இன் அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. இதுவே கேமை அகற்றுவதற்கான காரணம் என்று நம்பப்படுகிறது.

விளையாட்டைப் பதிவிறக்க முடியுமா?

குறிப்பிட்டுள்ளபடி, Google Play Store, Apple App Store பட்டியல்களில் இருந்து BGMI அகற்றப்பட்டது. அதாவது, அந்தந்த ஆப் ஸ்டோர்களில் இருந்து கேமைப் பதிவிறக்க எந்த வழியும் இல்லை. இருப்பினும், BGMI 2.0 புதுப்பித்தலுடன், கேமின் டெவலப்பரான கிராஃப்டன் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து APK கோப்பை வழங்கத் தொடங்கியுள்ளது.

எனவே, ஆண்ட்ராய்டு பயனர்கள் APK கோப்பைப் பதிவிறக்கம் செய்து தங்கள் ஸ்மார்ட்போன்களில் விளையாட்டை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன.

Space Debris: மண்ட பத்திரம்; சீன ராக்கெட்டின் குப்பைகளால் மனிதர்களுக்கு ஆபத்து?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் BGMI கேமை பதிவிறக்கம் செய்து நிறுவுவது எப்படி?

படி 1: பிரவுசரைப் பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனில் BGMI இணையதளத்தைத் திறக்கவும்.

படி 2: முகப்புத் திரையில் APK பதிவிறக்க பொத்தானை கிளிக் செய்யவும்.

படி 3: பதிவிறக்கம் செய்யும் APK கோப்பின் அளவு சுமார் 700MB ஆக இருக்கும். எனவே கோப்பு முழுவதுமாக பதிவிறக்கம் ஆகும் வரை காத்திருக்கவும்.

Google Street View: இனி உங்க வாழ்க்கைய ரொம்ப நிம்மதியா வாழலாம் – கூகுள் உங்களுக்கு வழிகாட்டும்!

படி 4: இப்போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட APK கோப்பில் கிளிக் செய்யவும்.

படி 5: Install From Unknown Sources என்பதை ஆக்டிவேட் செய்து, கேமை நிறுவவும்.

படி 6: உங்கள் BGMI கணக்கின் உள்நுழைவு தகவல்களைப் பயன்படுத்தி விளையாடத் தொடங்குங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.