5G Auction: ஏர்டெல்லுக்கு இன்னும் தேவை… விடாமல் பிடிக்கும் ஜியோ!

5g Spectrum Auction Bidding Day 6: இந்தியாவில் நடந்துவரும் 5ஜி அலைக்கற்றுக்கான ஏலத்தின் ஆறாவது நாள் முடிவுகளை தொலைத்தொடர்பு துறை (DOT) வெளியிட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதியின் கணக்குப்படி, இதுவரை ரூ.1.50 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் 5G சேவைகளை வெளியிட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. இதற்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் பரபரப்பாக நடந்து வருகிறது. இன்றுடன் ஸ்பெக்ட்ரம் ஏலம் ஏழாவது நாளை எட்டியுள்ளது.

Adani 5G: ஜியோ, ஏர்டெல்லை எதிர்கொள்ளுமா அதானி? 5ஜி ஏலம் சொல்வதென்ன?

அலைக்கற்றைகளை ஏலம் எடுக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்று மீண்டும் கூடியுள்ளன. மொத்தம் 37 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. ஆறாவது நாளில், அதாவது ஜூலை 31, 2022 அன்று, ஏழு சுற்றுகள் ஏலம் நடந்தது.

மொத்த ஏலத்தொகை ரூ.1.50 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 1800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையை ஏலம் எடுக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகம் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனத்திற்கு தேவைப்படும் அலைக்கற்றை

இதுவரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1,50,130 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளன. ஏர்டெல் நிறுவனத்திற்கு கிழக்கு உத்தர பிரதேசம் பகுதியில் 1800MHz அலைவரிசை அதிகமாகத் தேவைப்படுகிறது.

ஏனென்றால் ஏர்டெல்லைப் பொறுத்தவரை, அதன் 900 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் சில வட்டத்தில் 2024ஆம் ஆண்டுடன் காலாவதியாகிவிடும்.

மீண்டும் ஆதிகத்தை செலுத்த தயாராகும் ஜியோ

டெலிகாம் நிறுவனம் 700 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளில், 10 மெகா ஹெர்ட்ஸ் அளவு ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் இந்த 5ஜி ஏலத்தில் கடிமான தாக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிக செய்தி:
Xiaomi: சியோமி ஸ்மார்ட் கண்ணாடி; இனி ஸ்மார்ட்போன் வேலைகளை இது பார்த்துக்கொள்ளும்!

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இந்த போட்டியில் அரசு கணிசமான வருவாயை ஈட்டும். இதுவரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நடுத்தர அலைக்கற்றைகளில் அதிகளவு செலவிட்டுள்ளது. 5ஜியை வெளியிடுவதில் ஆபரேட்டர்களுக்கு நடுத்தர பேண்ட் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

WhatsApp Scam: வாட்ஸ்அப்பில் நிர்வாணமாக அழைப்பவர்கள் யார்? நீங்களும் வலையில் வீழலாம்!

நடுத்தர பேண்டுகளுக்கு போட்டி

டெலிகாம் நிறுவனங்கள் இந்த நடுத்தர அலைவரிசையைக் கொண்டு 5ஜி நெட்வொர்க்கை சரியான கவரேஜ், சரியான வேகத்துடன் வழங்க முடியும். அதானி, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த ஏலத்தில், ரிலையன்ஸ் ஜியோ தான் இரு மடங்கு அலைக்கற்றைகளை ஏலம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டபோது, உத்தரப் பிரதேசம் வட்டத்தில், 1800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையின் இருப்பு விலை 7.7 விழுக்காடு உயர்த்தப்பட்டது. 2100 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கும் அதிகளவு போட்டி இருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.