தென்னாபிரிக்க கிரிக்கட் சபை: ரி-20 லீக் சுற்றுத்தொடரில் இலங்கை அணி வீரர்கள்

இலங்கை அணி வீரரான துஷ்மந்த சமீரவின் ஒப்பந்தத்தின் பெறுமதி இரண்டு லட்சம் அமெரிக்க டொலர்களாகும். சாமிக்க கருணாரட்ன ஒரு லட்சத்து 50 ஆயிரம் டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

மஹிஸ் தீக்ஷன ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றார். அகில தனஞ்ஜய, நிரோஷன் திக்வெல்ல, சீக்குகே பிரசன்ன, நுவன் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ போன்ற வீரர்களும் இந்த சுற்றுத்தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ,தென்னாபிரிக்க கிரிக்கட் சபை ஒழுங்கு செய்யும் ரி-20 லீக் சுற்றுத்தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. லியம் லிவிங்ஸ்டன், ஜோஸ் பட்லர் ஆகிய வீரர்களின் ஒப்பந்தப் பெறுமதி ஐந்து லட்சம் அமெரிக்க டொலர்களாகும்.

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொஹின் அலி, தென்னாபிரிக்க கிரிக்கட் சபையுடன் நான்கு லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.