Salman Rushdie: சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து.. வெண்டிலேட்டரில் சிகிச்சை – ஒரு கண்ணை இழக்கும் அபாயம்!

அமெரிக்காவில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்துள்ள பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சல்மான் ருஷ்டி, 75. பிரபலமான எழுத்தாளராகிய இவர் எழுதிய, “சாத்தானின் வேதங்கள்” என்ற நூல், சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி, அவருக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பல்வேறு தரப்பினர் மிரட்டல் விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது மேடையில் திடீரென ஏறிய மர்ம நபர், சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், அவருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதை அடுத்து, சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் 24 வயதான ஹடி மடர் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா குறித்து வடகொரிய அதிபர் அதிர்ச்சி தகவல்..! என்ன சொன்னார் தெரியுமா..?

இந்நிலையில், கழுத்து, வயிறு மற்றும் முகத்தில் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் அதிக ரத்தத்தை இழந்த சல்மான் ருஷ்டிக்கு தற்போது செயற்கை சுவாசக் கருவியுடன் வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பல மணி நேர சிசிச்சைக்கு பிறகும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் அவர் ஒரு கண் பார்வையை இழக்க நேரிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.