அந்த மனசுதான் கடவுள்! பிச்சை எடுத்த 50 லட்சத்தை அரசுக்கு வழங்கிய நபர்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், தாலுகா ஆழங்கிணறைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவருக்கு திருமணமாகி 2 மகள், 1 மகன் உள்ளனர். பம்பாயில் தேய்ப்புக்கடை நடத்தி அங்குள்ள சுப்பிரமணியன் சுவாமி கோவிலில் 15 வருடம் பணி செய்து குழந்தைகள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.  அதன்பின் 2010ம் ஆண்டில் தமிழ்நாடு வந்த இவரை குடும்பத்தினர் ஒதுக்க ஆரம்பித்து உள்ளனர்.  

இதனால் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ராமேஸ்வரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிச்சை எடுத்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வந்தார். அரசு பள்ளிகளுக்காக, கொரானா நிதி , இலங்கை தமிழர்க்கு என நிவாரண நிதி வழங்கி வந்தார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் வருகை தந்த சமூக சேவகர் இருக்கண்குடி கோவில் திருவிழாவிற்கு வந்து தங்கி கோவில், வீடு, கடைகளில்  பிச்சை எடுத்து ரூ.10 ஆயிரம் சேமித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டியிடம் இலங்கை தமிழர்களுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
இதுவரை இவர் இது போன்று ரூ 50 லட்சத்து 60 ஆயிரம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

begger

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.