கொரோனா பாதிப்பு: சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறும் என்ற தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் 30,000-ஐத் தாண்டியது ஒரு நாள் தொற்றின் அளவு: இன்று 30355 பாதிப்பு, 293 பேர் பலி

இன்று தமிழகத்தில் 30,355 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 293 பேர் இறந்த நிலையில், 19,508 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னை மண்டலங்களுக்கு தலா 3 கோவிட் சிறப்பு வாகனங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 3 கோவிட் சிறப்பு அவசர வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

மின்சார வாகங்களுக்கான மிகப் பெரிய செய்தி: ஊக்கமளிக்கும் உத்வேகத்தில் மத்திய அரசு

கொரோனா நெருக்கடி காரணமாக பின்தங்கிப்போன மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா திட்டங்களை மீண்டும் புதுப்பிக்க ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.   

அதிகரிக்கும் Mucormycosis நோயாளிகள்: 50% இறப்பு விகிதத்துடன் தயாராகிறது அடுத்த நோய்!!

இந்த நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 50% பேர் இறக்கிறார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து இந்த நோயின் தீவிரம் தெரிகிறது. இந்த சூழ்நிலையில், இப்போது இந்த மாநிலங்களில் Mucormycosis ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் அப்டேட், தயாரிப்பாளர் அறிக்கை!

நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படாது, ஒத்தி வைக்கப்படும்: கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரக்ளுக்கான பொதுத்தேர்வு ஆகியவை பற்றி ஆலோசிக்க பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.  

Hostilities: தொடர்கதையாகும் போர் வன்முறை காசாவில் 35 பேர், இஸ்ரேலில் 5 பேர் பலி

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பகையின் எதிரொலி ஒரே இரவில் அதிகரித்ததில், காசாவில் 35 பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலில் ஐந்து பேரும் உயிரிழந்தனர்.

Good news! சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பதிவு கட்டணம் விலக்கு – தமிழக அரசு

கொரோனா வைரஸின் பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மக்களை நோய்த்தொற்றின் பிடியில் இருந்து பாதுகாக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.