சுவிட்சர்லாந்தில் பிசினஸ் செய்வதற்கேற்ற மாகாணங்கள் எவை?


சுவிஸ் மாகாணங்கள் சில, சாதகமான வரிச் சுழல் முதலான காரணங்களால் பிசினஸ் செய்வதற்கேற்ற மாகாணங்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

Aargau மாகாணம், பிசினஸ் செய்வதற்கு உகந்த மாகாணங்கள் பட்டியலில் கிழே, அதாவது 7ஆவது இடத்தில் உள்ளது.

ஒரு இடத்தில் பிசினஸ் செய்யவேண்டும் என்றால், அந்த இடத்தில் வரிகள் சாதகமாக இருக்கவேண்டும், பொருட்களை அனுப்ப விமான நிலையம் செல்வதற்கான எளிய வழி இருக்கவேண்டும் என்பது போன்ற பல விடயங்கள் அவசியம்.

அவ்வகையில், சுவிட்சர்லாந்தில் பிசினஸ் செய்வதற்கு உகந்த மாகாணங்கள் எவை என பார்க்கலாம்.

Credit Suisse நிறுவனம் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலின்படி, பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் மாகாணங்களில் ஜெனீவா மாகாணம் அதிக புள்ளிகள் பெற்று பிசினஸ் செய்வதற்கு ஏற்ற மாகாணம் என்ற தகுதியைப் பெற்றுள்ளது .

என்றாலும், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக பிசினஸ் செய்வதற்கு ஏற்ற மாகாணமாக திகழ்வது Zug. அதைத் தொடர்ந்து அடுத்ததாக பேசல், சூரிச் மற்றும் ஜெனீவா ஆகியவை உள்ளன.

தரவரிசைப் பட்டியலில் மோசமான இடத்தைப் பெற்றுள்ளது Aargau மாகாணம். Nidwalden மற்றும் Schwyzக்கு அடுத்தபடியாக அது 7ஆவது இடத்தில் உள்ளது.

அதேநேரத்தில் Schaffhausen மற்றும் Valais மாகாணங்கள் இரண்டுமே பட்டியலில் ஒரு படி முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

சுவிட்சர்லாந்தில் பிசினஸ் செய்வதற்கேற்ற மாகாணங்கள் எவை? | Which Provinces Are Good For Doing Business Swis

image – thelocal



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.