ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை – எய்ம்ஸ் குழு அறிக்கை

சென்னை:
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமாக தவறுகளும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் உள்ளடக்கிய எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆணையத்தில் அளிக்கப்பட வாக்குமூலங்களில் ஆவணங்களையும், அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கைகள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர்.

இதன் மூலமாக ஆணையத்தில் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ள இறுதி முடிவுகள்.

  • ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபடுவதற்கு முன்பாக நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்த்தையும், அதற்கு சிறப்பு மருத்துவகள் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது திராட்சை, கேக், இனிப்புகளையும் சாப்பிட்டுள்ளார்.
  • 20.09.2016 அன்று இரவு 10 மணிக்கு ஆம்புலன்ஸ் கேட்டு ஜெயலலிதா இல்லத்தில் இருந்து தொடர்பு கொண்டதாகவும், அப்போது இருந்த உடல்நிலை பார்த்து, முதற்கட்ட சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு இன்சுலின் உள்பட நோய் தன்மைக்கு ஏற்ப மருத்துகள் அளிக்கப்பட்டுள்ளது.
  • தற்காலிகமாக பேஸ்மேக்கர் கருவியும் ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டுள்ளது.
  • தொடர்ந்து லண்டன் மருத்துவர் ரிச்சட் பிலே உள்பட அப்பல்லோ சிறப்பு மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவ குழுவும் சிசிக்சை அளித்து வந்தனர்.
  • டிசம்பர் 3 ம் தேதி ஜெயலலிதா உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 4 ம் தேதி மூச்சுவிடுவதற்கு பெரும் சிரம்பட்டுள்ளார். இதை தொடர்ந்து இதயம் செயலிழந்தால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டுள்ளது
  • டிசம்பர்5 ம் தேதி உரிய மருத்துவ நடைமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உடலை பரிசோதித்து மூளை மற்றும் இதயம் செயலிழந்தது என்பதை உறுதி செய்து டிசம்பர் 5 ம் தேதி 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

எனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவ குழு தெரிவித்துள்ளது. கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கான நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், பாக்டீரியா ரத்தத்தில் பரவி இருக்கிறது. இது போல உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் காரணமாக இறுதியாகவும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. வரும் 23 ம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி இறுதி அறிக்கையை அரசிடம் சமர்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.