செம அறிவிப்பு! தீபாவளிக்கு 11 நாட்கள் விடுமுறை!!

வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக, ஊழியர்கள் அனைவருக்கும் நீண்ட விடுமுறை அறிவித்து மீஷோ நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

மீஷோ நிறுவன ஊழியர்களுக்கு அக்டோபர் 22 தொடங்கி நவம்பர் 1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு மன ரீதியாக புத்துணர்ச்சி கிடைக்க இந்த விடுமுறை உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடுமுறை அறிவித்துவிட்டு, சில முக்கிய பணிகளை வீட்டில் இருந்தே செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல், இந்த 11 நாட்களிலும் ஊழியர்கள் முழுமையாக தங்கள் வேலைகளை ஒத்திவைத்துவிட்டு புத்துணர்ச்சி அடையலாம் என்று மீஷோ நிறுவனம் கூறியுள்ளது.

ஊழியர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் அவர்கள் தங்கள் புதுப்பித்துக் கொள்ளவும், மறுகட்டமைப்பு செய்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மீஷோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஊழியர் நலனுக்காக நல்ல பல நடவடிக்கைகளை மீஷோ நிறுவனம் ஏற்கனவே செய்திருக்கிறது. புதிதாக குழந்தை பிறந்தால், பெற்றோர் என்ற அடிப்படையில் அந்த ஊழியர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 30 வாரங்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு 30 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் சுதந்திரமான பணிக்கொள்கை ஒன்றை மீஷோ செயல்படுத்தியது. அதாவது, வீடு, அலுவலகம் அல்லது வேறு ஏதேனும் ஒரு இடம் என ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களில் இருந்து பணி செய்யலாம் என்று சலுகை அளிக்கப்பட்டது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.