ஆளுநர் மாளிகை கொலு கண்காட்சி; பொதுமக்கள் பார்வையிட அனுமதி

சென்னை:
மிழக ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியை வரும் 5ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி பல்வேறு தரப்பினரிடம் பாராட்டு பெற்றுள்ளது. இந்நிலையில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியை இன்று முதல் வரும் அக்டோபர் 5ம் தேதி வரை தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாணவர்கள் உள்பட பொதுமக்கள் பார்வையிடலாம்.

நாள் ஒன்றுக்கு 80 பேர் வரை பார்வையிடலாம். மின்னஞ்சலில் பதிவு செய்த பிறகு ஒவ்வொருவருக்கும் நேரம் ஒதுக்கப்படும். ஒதுக்கப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக பார்வையாளர்கள் அசல் அடையாள சான்றுடன் ஆளுநர் மாளிகையின் 2வது நுழைவாயிலுக்கு வர வேண்டும். இந்திய குடிமக்களாக இருந்தால் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வெளிநாட்டினர் அவர்களின் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும்.

பார்வையாளர்கள் தனியாக அல்லது அதிகளவு 5 பேர் கொண்ட குழுவாக வரலாம். ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள் கைப்பேசி மற்றும் கேமராக்கள் எடுத்துவர அனுமதியில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆளுநர் மாளிகையை பார்வையிட செல்வதற்கான கோரிக்கையை அங்கீகரிக்கும் மற்றும் நிராகரிக்கும் உரிமை ஆளுநர் அலுவலகத்திற்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.