உலகளவில் கொரோனா: குணமடைந்தோரின் எண்ணிக்கை

உலகளவில்  கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 60 கோடியே 66 இலட்சத்து 55 ஆயிரத்து 830 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 இலட்சத்து 61 ஆயிரத்து 786 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 68 இலட்சத்து 23 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 36 இலட்சத்து 5 ஆயிரத்து 709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.