அமித் ஷா உத்தரவு இது தான்; மனம் திறந்த அண்ணாமலை!

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடுத்தடுத்து, தமிழ்நாட்டுக்கு வந்து சென்று இருக்கும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

பாஜக மீது தமிழ்நாட்டு மக்களுக்கு அன்பு பெருகி வருகிறது. பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து சென்றது மகிழ்ச்சியான தருணம். தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி எல்லையற்ற பாசம் வைத்துள்ளார்.

பிரதமர் மோடியை சந்திக்க நேற்று வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழக மக்கள் குறித்தும், தமிழ்நாட்டின் தற்போதையை செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

கொட்டும் மழையிலும், பெண்கள் குழந்தைகளுடன் காண வந்தது பிரதமரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. காசி சங்கமம் குறித்து திண்டுக்கலில் பிரதமர் தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

வாரணாசிக்கு தமிழர்கள் 19ம் தேதி வரும்போது வரவேற்க நான் கட்டாயம் இருப்பேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வருகை எங்களுக்கு ஊக்கமாக இருந்தது.

தலைவர்களை அமித்ஷா உற்சாகமூட்டிவிட்டு சென்று இருக்கிறார். பாஜக வளர்ச்சி, தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தான் ஆலோசனை நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் எதுவும் பேசவில்லை. மருத்துவ படிப்பை தாய்மொழியில் படிக்க வேண்டும் என அமித்ஷா கூறினார்.

தமிழ் வழியில் பொறியியல் படிப்புகளை படிக்க மொத்தம் 1350 இடங்கள் உள்ளன. ஆனால், பொறியியல் படிப்பை வெறும் 50 மாணவர்கள் மட்டுமே தாய்மொழியில் படித்து வருகின்றனர்.

திமுகவை பொறுத்தவரையில் பாஜகவை எதிரியாக பார்க்கிறார்கள். ஆனால், எங்களை பொறுத்தவரையில் சித்தாந்த அடிப்படையில் மட்டும் திமுகவை எதிரியாக பார்க்கின்றோம்.

தாய்மொழியான தமிழ் மொழியை மெருகேற்ற வேண்டும் என அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். நேற்று டிவிட்டரில் ‘வணக்கம் மோடி’ என்ற ஹாஷ்டேக் அதிகளவில் பகிரப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் 14 லட்சம் பேர் பிரதமர் மோடியை வரவேற்று டிவிட்டரில் பகிர்ந்திருந்தனர். இவ்வாறு, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது, கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.