மீண்டும் கைக்கொக்கிறார்களா சமந்தா – நாக சைதன்யா ஜோடி?

நடிகை சமந்தா நடிப்பில் நேற்று வெளியான ‘யஷோதா’ திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமந்தாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.  சமூக வலைதளத்தில் இந்த படம் குறித்த பாராட்டுகளும், கருத்துகளும் நிரம்பிவழிந்த அதே நேரத்தில், சமந்தாவும், அவரின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் இணைந்து நடிக்க படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதாவது, நாக சைதன்யா – சமந்நதா ஆகியோர் இணைந்து அடுத்து பெரிய பட்ஜெட் கொண்ட திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களது மணமுறிவு அறிவிப்புக்கு பின்னர், தற்போது படத்தின் மூலம் இணைய உள்ளது தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், இந்த படத்தை யார் இயக்குகிறார்கள், எந்த மொழியில் தயாராக உள்ளனர் என்ற தகவல்கள் ஏதுமில்லை. 

முன்னதாக, காஃபி வித் கரன் 7 என்ற நிகழ்ச்சியில், இயக்குநர் கரன் ஜோஹர் சமந்தாவின் மணமுறிவு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சமந்தா,”எங்கள் இரண்டு பேரையும் ஒரே அறையில் தற்போது நீங்கள் அடைத்துவைத்தால், அங்குள்ள கூர்மையான பொருள்களை நீங்கள் ஒளித்துவைக்க வேண்டியதாக இருக்கும்” என பதிலளித்திருந்தார். இதன்மூலம், மணமுறிவினால் அவரின் வருத்தமும், வேதனையும் வெளிப்பட்டது.  சமந்தா – நாக சைதன்யா இணையர், 2017ஆம் ஆண்டு அக்டோபரில் திருமணம் செய்துகொண்டனர். தொடர்ந்து, கடந்தாண்டு (2021) அக்டோபரில் இந்த ஜோடி தங்களது மணமுறிவை அறிவித்தது. 

கடந்த சில நாள்களுக்கு  முன், சமந்தா அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது. இதுகுறித்து சமந்தா, கடந்த அக். 29ஆம் தேதி அன்று அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அரிய வகை நோய்களில் ஒன்றான இதில் இருந்து விரைவில் குணமடைவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் சோர்வும், தசை வலியும் அதிகமிருக்கும் என கூறப்படுகிறது. இந்த நோயில் இருந்து முற்றிலுமாக குணமடைய சற்று காலமெடுக்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் சிறிதுநேரம் நின்றாலோ அல்லது நடந்தாலோ அவர்கள் சோர்வாகி அடிக்கடி மயக்கமிடவும் வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.