Amazon Air Delivery: வீட்டிற்கு பறந்து வந்து பொருட்களை டெலிவரி செய்யும்!

Amazon
நிறுவனம் இந்த ஆண்டு முதல் அதன்
Air Delivery Drone
கொண்டு பொருட்களை டெலிவரி செய்யும் என்று அறிவித்துள்ளது. இந்த டிரோன் குறைந்த அளவு மழை மற்றும் வெப்பத்தை தாங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த டிரோன் பெயர் ‘MK30’ ஆகும். இந்த டிரோன் டெலிவரி முறை வரும் 2024 ஆம் ஆண்டு முதல் தொடங்கும். இது தற்போதுள்ள டிரோன்களை விட 25% சத்தம் குறைவாக இருக்கும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த டிரோன் அறிமுகம் செய்ய முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்த புதிய ரக டிரோன் வானத்தில் 100 அடியில் 5 பவுண்ட் எடையை தாங்கக்கூடிய அளவு திறன் கொண்டது.

தற்போதைக்கு பயன்படுத்திவரும் ‘MK27-2’ மாடல் டிரோன்களுக்கு பதிலாக இந்த புதிய ‘MK30’ டிரோன் பயன்படுத்தப்படும். வானத்தில் பறக்கும்போது இருக்கும் ஆபத்துகள் அப்படியே இருந்தாலும் இதன் டிசைன் பாதுகாப்பான டிசைனாக பார்க்கப்படுகிறது.

இந்த புதிய டிரோன் அமெரிக்காவின்
Federal Aviation Administration (FAA)
முன்னிலையில் இதன் பாதுகாப்பு மற்றும் திறன் சோதனை செய்யப்பட்டு பின்னர் செயல்பாட்டிற்கு வரும் என்று அமேசான் தெரிவித்துள்ளது.

இந்த டிரோன் கொண்டு பல தொலைதூர பயங்களையும் செய்து பொருட்களை டெலிவரி செய்யமுடியும் என்று தெரிகிறது. இதனால் மனிதர்களுக்கு, விலங்குகள் மற்றும் வேறு பொருட்கள் எதற்கும் ஆபத்து இல்லாமல் பயணம் மேற்கொள்ளமுடியும்.

இந்த
Amazon Prime
Air Delivery திட்டம் முதல்கட்டமாக கலிபோர்னியா, டெக்ஸாஸ் ஆகிய மாகாணங்களில் அறிமுகம் செய்யப்படும். பின்னர் படிப்படியாக அமெரிக்கா முழுவதும் அறிமுகம் செய்யப்படும். 2025 ஆம் ஆண்டிற்கு பிறகு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.