உச்சத்தை தொட்ட உலக மக்கள் தொகை: ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ஆதிக்கம்



உலக மக்கள் தொகையின் எண்ணிக்கையானது இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 8 பில்லியனை அடையும் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.


ஐ.நா வெளியிட்டுள்ள மதிப்பீடு

ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின் படி 2022ல் நவம்பர் 15ம் திகதி அன்று உலக மக்கள் தொகை சுமார் 8 பில்லியன் என்ற எண்ணிக்கையை அடையும் என தெரியவந்துள்ளது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2011ம் ஆண்டில் 7 பில்லியன் என்ற எண்ணிக்கையில் உலக மக்கள் தொகை இருந்தது.

மனித வரலாற்றின் பக்கங்களை உற்று நோக்கினால் 1800 AD  ஆண்டில் உலகின் மனித எண்ணிக்கையானது வெறும் 1 பில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்துள்ளது, ஆனால் வெறும் 200 ஆண்டுகள் இடைவெளியில் இந்த எண்ணிக்கை 7 பில்லியன் அதிகரித்துள்ளது.

இதே விகிதாசாரத்தில் உலக மக்கள் தொகை உயர்ந்தால், இறுதியில் 10.5 பில்லியன் என்ற விகிதத்தில் மக்கள் தொகை நிலை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரச் சமநிலையில் மாற்றம்

மக்கள் தொகையில் தற்போது ஏற்பட்டு வரும் மாறுதல் உலகளவில் மிகப்பெரிய அதிகாரச் சமநிலை மாற்றங்களை கொண்டு வரலாம் என தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் வரும் நூற்றாண்டில் மக்கள் தொகை உயர்ந்தால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பலம் அதிகரிக்கும்.

1900களில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா இணைந்து 31% மக்கள் தொகையை கொண்டு இருந்தது ஆனால், தற்போது அதன் விகிதம் 14%  வரை குறைந்துள்ளது எனவும், 2050ம் ஆண்டு இதன் விகிதம் 12%மாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதே போன்றே 1900களில் உலக மக்கள் தொகையில் 25% மாக இருந்த சீனாவின் மக்கள் தொகை 2050ம் ஆண்டு 14% குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.