ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழ்நாட்டில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டும் இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வரை, சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் இருந்து, பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.

இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், 30 நாட்களுக்கு முன்னதாக இந்த சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in இணையதளம் மற்றும் TNSTC Official செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445017793, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய கைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். எனவே, சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.