என்னப்பா சொல்றீங்க..!! ஒரு வேளை சாப்பிட்ட நபருக்கு ரூ.1 கோடி 30 லட்சம் பில்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் துருக்கியை சேர்ந்த நுஸ்ரெட் கோக்சி என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். சமையல் கலை வல்லுநரான இவருடைய உணவகத்தில் இவரால் தயாரிக்கப்படும் உணவுகளை கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்.

ஒரு நபரின் ஒரு வேளை இரவு உணவுக்கு இந்திய மதிப்பில் ரூ 22 ஆயிரம் கொடுத்து உண்பதற்கு கூட வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள். துபாய் நாணய மதிப்பில் 1000 திராம். உணவு பிரியர்களும், சமூக ஊடகத்தைப் பயன்படுத்துபவர்களும் இவரைத் தெரியும். இவரது பெயர் பலருக்கும் தெரியவில்லை என்றாலும் இவர் விதவிதமாக செய்யும் உணவு வீடியோக்களை நாம் பார்த்திருப்போம்.

அவர் தனது கையை பாம்புபோல் வைத்துத் தான் சமைத்த உணவின் மீது உப்புபோன்ற வெள்ளையான ஒன்றை அப்படியே தூவும் வீடியோ காட்சிகளை நாம் பலரும் பார்த்திருப்போம். இதுதான் அவரின் அடையாளம். இவர் நடத்தும் உணவகத்தில் லியோன் மெஸ்ஸி, லியனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் வந்து சாப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நுஸ்ரேட் கோக்சி நடத்தும் உணவகத்தில் ஒருவேலைச் சாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர் ரூ.1.3 கோடிக்கு பில்லுக்கு ரூ. 6 லட்சம் வரி கணக்கிடப்பட்ட பில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பில் தொகையைப் பார்த்த பலரும் ஆச்சரியமடைந்து பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்

துபாய் கரென்சியில் 615,065 திராம். இந்த ஒரு வேளை உணவுக்கு மதிப்பு கூட்டு வரி எனப்படும் வாட் மட்டும் ரூ 6.5 லட்சம் வசூலிக்கப்பட்டது. உணவுக்கான ரசீதை நுஸ்ரெட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நுஸ்ரேட் கோக்சி சமைக்கும் உணவு வீடியோவை பார்ப்பதற்காகவே 49 மில்லியனுக்கும் அதிகமானோர் இவரைப் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.