முகம் முழுவதும் முடி வளரும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்!!

மத்தியப்பிரதேச மாநிலம் ராட்லாம் மாவட்டம் நண்ட்லெட்டா கிராமத்தை சேர்ந்த லலித் படிதார் என்ற இளைஞருக்கு பிறந்ததில் இருந்தே முகம் உள்பட உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்துள்ளது.

எனவே, அவர் அந்த கிராமத்தில் விசித்திரமானவராக திகழ்ந்துள்ளார். அவருக்கு 6 வயது இருக்கும்போது குரங்கு மனிதர் என அக்கம் பக்கத்தினரால் அழைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக இவர் வீட்டில் இருந்து வெளியே வருவதை இல்லை.

இவருக்கு உள்ளூர் தொண்டு நிறுவனங்களில் உதவியோடு மருத்துவ நிபுணர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் werewolf syndrome என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு தலையில் வளர்வது போலவே உடல்முழுவதும் நீளமாக முடி வளரும். இது குறித்து பேசியுள்ள மருத்துவ வல்லுநர்கள், இந்த நோயால் பாதிக்கப்படுபவரை குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லை என் கூறியுள்ளனர்.

இந்த நோய் மரபணு குறைபாட்டால் ஏற்படுகிறது என்றும், இதுவரை 100-கும் குறைவானவர்களுக்கு தான் இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

அதேநேரம் தற்காலிக தடுப்பு முறைகளை பயன்படுத்து அதன் பாதிப்பை குறைக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பாக செய்தி வெளியான நிலையில், பலரும் லலித் படிதாருக்கு உதவ முன்வந்துள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.