மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..!!

ஈரோட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் இன்று நடந்தது. விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில், “புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்துள்ளது. இப்பொழுது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறை சார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. டிசம்பரில் இது முடிவடையும். ஜனவரியில் முதலமைச்சரிடம் இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு முதல்-அமைச்சர் அதை ஆய்வு செய்து ஆணை வெளியிடுவார்.

நடப்பாண்டு தமிழகம் முழுவதும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 4.8 லட்சம் பேருக்கு எழுத்தறிவு கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மாவட்டத்தின் இலக்கு 23 ஆயிரத்து 598. கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு திட்டம் பயன் தந்தது. இலக்கை விஞ்சி 5 லட்சம் பேர் வரை இத்திட்டத்தில் பயன் அடைவார்கள். பள்ளிக் கல்வித் துறை சார்பில் 24 வகையான விளையாட்டில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார். அத்துறையுடன் இணைந்து மேலும் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்க கூடாது என்று வலியுறுத்தப்படும்.

பள்ளிகளில் குழந்தைகள் கஞ்சா போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்று முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட்டத்தில் கூட போதை பொருள் இல்லா மாநிலத்தை உருவாக்குவதை அவர் வலியுறுத்தி உள்ளார். எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.