பிரதமர் மோடியின் தாயார் மறைவு: உலக தலைவர்கள் இரங்கல்| World Leaders Mourn Death Of PM Modi’s Mother

டோக்கியோ: தாயார் ஹீராபென் மறைவுக்காக பிரதமர் மோடிக்கு, ஜப்பான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல்நலக்குறைவால் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று (டிச.,30) அதிகாலை 3 : 30 மணியளவில் காலமானார். வீட்டில் மரியாதை செலுத்திய பிறகு, தாயார் உடலை மோடி சுமந்து வந்தார். காந்தி நகரில் உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ஹீராபென் மறைவுக்காக நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடோ

உங்களது அன்பு தாயின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

latest tamil news

ஒருவருக்கு தாயார் இழப்பை விட பெரிய இழப்பு ஏதும் இருக்க முடியாது. தாயாரை இழந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.

நேபாள பிரதமர் பிரசண்டா

latest tamil news

பிரதமர் மோடியின் அன்பு தாயார் ஹீராபென் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில், பிரதமர் மோடி மற்றும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், மறைந்த ஹீராபெனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்.

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச

latest tamil news

ஹீராபென் மறைவு செய்தி ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அன்புக்குரிய தாயாரை இழந்த பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த சோகமான நேரத்தில் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக வேண்டி கொள்கிறோம். அவர்களின் நினைவாக எண்ணங்கள் உள்ளது.

நேபாள முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தேபா

latest tamil news

ஹீராபென் மோடியின் மறைவுக்காக, நரேந்திர மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஆன்மா மோட்சத்தை அடையட்டும்.

இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங்

ஹீராபென் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தோம். எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், இந்த சோகமான நேரத்தில், பிரதமர் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரின் நினைவாக எங்களது எண்ணங்கள் உள்ளன.

இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ்

மிகப்பெரிய இழப்பிற்காக நரேந்திர மோடிக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இந்தியாவிற்கான ஜெர்மனி தூதர் பிலிப் அகர்மன்

பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த இரங்கல். இந்த துயரமான நேரத்தில் அவர் மற்றும் குடும்பத்தினருடன் நாங்களும் இணைந்து கொள்கிறோம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.