செக்ஸ் இல்லாததே நீண்ட ஆயுளுக்கு காரணம்.. 126 வயது முதியவர் அதிரடி..!

செக்ஸ் வைத்துக்கொள்ளாததே நீண்ட ஆயுளுக்கு காரணம் என்று உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் வசிக்கும் உலகின் அதிக வயதுடைய நபர் தெரிவித்துள்ளார்.

1987-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி பிறந்த இவருக்கு தற்போது 126 வயது ஆகிறது. இவருடைய பிறந்த தேதி பாஸ்போர்ட்டின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஜப்பானைச் சேர்ந்த ஜிரோமோன் கிமுரா தான் உலகிலேயே அதிக வயதான நபர் என கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு படைத்திருந்தார். அவரது சாதனையை சிவானந்தா முறியடித்துள்ளார்.

5.2 அடி உயரம் கொண்ட இவர் தரையில்தான் உறங்குகிறார். யோகா ஆசிரியரான இவர் தலையணையாக மரப்பலகையை உபயோகப்படுத்துவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்றளவும் எந்த மருத்துவ குறைபாடுகளும் இன்றி இவர் வாழ்ந்து வருகிறார். அத்துடன் இவர் ரயில் பயணங்களும் மேற்கொண்டு வருகிறார். தற்போது கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டில் இடம் பெறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறார்.

தனது ஆரோக்கியம் குறித்து பேசிய இவர், சாதாரண உணவு தான் உட்கொள்வதாகவும், பால், பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், செக்ஸ் வைத்துக்கொள்ளாததும், எண்ணெய் பொருட்களை தவிர்த்து ஆவியில் வேக வைத்த உணவுகளை உண்பதும் தான் நீண்ட ஆயுளுக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.