நேபாள விமான விபத்து: இரண்டு கருப்பு பெட்டிகளும் மீட்பு


நேபாளத்தில் விபத்துக்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்மாண்டு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

68 பேர் மரணம்

நேபாளத்தின் போக்ரா நகரில், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) 5 இந்தியர்கள் உட்பட 72 பேருடன் சென்ற விமானம், புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கோர்ஜ் ஆற்றில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 68 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இமயமலை தேசமான நேபாளத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிக மோசமான விமான விபத்து ஆகும்.

நேபாள விமான விபத்து: இரண்டு கருப்பு பெட்டிகளும் மீட்பு | Nepal Plane Crash Black Boxes Recovered

இரண்டு கருப்பு பெட்டிகளும் மீட்பு

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) விபத்து நடந்த இடத்தில் இருந்து எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் ஆகிய இரண்டும் இன்று மீட்கப்பட்டுள்ளன.

அவை ஏற்கனவே நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் (CAAN) ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா தெரிவித்தார்.

நேபாள விமான விபத்து: இரண்டு கருப்பு பெட்டிகளும் மீட்பு | Nepal Plane Crash Black Boxes RecoveredAFP

மீட்புப்பணி

எட்டி ஏர்லைன்ஸின் இரட்டை எஞ்சின் ஏடிஆர் 72 விமானம் 72 பேருடன் நான்கு பணியாளர்கள் மற்றும் ஐந்து இந்தியர்கள் உட்பட 68 பயணிகளை ஏற்றிச் சென்றபோது, ​​தெளிவான வானிலையில் சுற்றுலா நகரமான பொக்ராவின் விமான நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.

இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் சுதர்சன் பர்தாவுலா கூறினார்.

நேபாள விமான விபத்து: இரண்டு கருப்பு பெட்டிகளும் மீட்பு | Nepal Plane Crash Black Boxes RecoveredAP

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக போதனா மருத்துவமனையில் இருந்து மருத்துவக் குழு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் பொக்ராவை அடைந்தவுடன், போகாராவில் உள்ள மேற்கு பிராந்திய மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 68 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, மீதமுள்ள நான்கு உடல்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த இடம் சேதி ஆற்றின் ஆழமான பள்ளத்தாக்கில் இருப்பதால், தேடுதல் நடவடிக்கைகளுக்கு மிகவும் கடினமாக இருந்ததாக நேபாள ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

நேபாள விமான விபத்து: இரண்டு கருப்பு பெட்டிகளும் மீட்பு | Nepal Plane Crash Black Boxes RecoveredAP 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.