அமெரிக்காவில் ஒரே ஆண்டில் 44,000 மக்கள் மரணம்! அதிர வைக்கும் புள்ளிவிவர அறிக்கை


அமெரிக்காவில் கடந்த ஆண்டில் மட்டும் துப்பாக்கிச் சூட்டினால் 44 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை கலிபோர்னியாவில் லூனார் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்.

Huu Can Tran என்ற நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் 648 முறை பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், அதில் 44 ஆயிரம் மரணம் நிகழ்ந்ததாகவும் அதிர்ச்சிகரமான புள்ளி விவர அறிக்கை வெளியாகியுள்ளது.

மேலும், அதற்கு முந்தைய ஆண்டான 2021ஆம் ஆண்டில் 49,000 பேர் துப்பாக்கிச்சூடு காயங்களால் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரே ஆண்டில் 44,000 மக்கள் மரணம்! அதிர வைக்கும் புள்ளிவிவர அறிக்கை | Report Said 44 Thousand People Death Gun Shot Us

அதிர்ச்சி அறிக்கை

இதற்கிடையில் Everytown ஆராய்ச்சி மற்றும் கொள்கை அறிக்கையின்படி, மற்ற உயர் வருமான நாடுகளை விட அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை 26 மடங்கு அதிகமாக உள்ளதாகவும், துப்பாக்கி மூலம் தற்கொலை செய்து கொள்பவர்களின் விகிதம் கிட்டத்தட்ட 12 மடங்கு அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மக்களை விட அதிகமான ஆயுதங்கள் உள்ளன. அதாவது, பெரியவர்கள் மூவரில் ஒருவர் குறைந்தது ஒரு ஆயுதத்தை வைத்திருப்பதாகவும், கிட்டத்தட்ட இரண்டு பெரியவர்களில் ஒருவர் ஆயுதம் இருக்கும் வீட்டில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.    

அமெரிக்காவில் ஒரே ஆண்டில் 44,000 மக்கள் மரணம்! அதிர வைக்கும் புள்ளிவிவர அறிக்கை | Report Said 44 Thousand People Death Gun Shot Us



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.