பிரதமர் நிகழ்வுக்கு வந்த நிர்வாகி உயிரிழப்பு: நிதியுதவி வழங்கிய அண்ணாமலை

பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாகன விபத்தில் உயிரிழந்த மதுரை பாஜக நிர்வாகியின் வீட்டிற்கு நேரில் சென்று அண்ணாமலை நிதியுதவி வழங்கினார்.

கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு., திண்டுக்கல்லில் இருந்து கார் மூலம் மதுரை வந்த திருநகர் அருகே சீனிவாச காலனியில் உள்ள மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மதுரை மாவட்ட நெசவாளர் அணி தலைவர் KT.ஹரிராம் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

மதுரை திருநகர் அருகே உள்ள சீனிவாச காலனி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பாஜக நிர்வாகி கே.டி.ஹரிராம். இவர் கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவில் மதுரை மாவட்ட நெசவாளர் அணி தலைவராக இருந்தவர். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் நாகநந்தினி., பிரியதர்ஷினி என இரு மகள்களும் உள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்தார். பாரதப் பிரதமர் வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் பாஜக மூத்த உறுப்பினரும்., நிர்வாகியுமான கே.டி. ஹரிராமும் கலந்து கொண்டு திண்டுக்கலில் இருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கார் நாகமலை புதுக்கோட்டை அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கே.டி.ஹரிராம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

தொடர்ந்து இன்று மதுரை வந்துள்ள தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு தனியார் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துவிட்டு தற்போது உயிரிழந்த திருநகர் சீனிவாச காலனி மகாலட்சுமி நகரில் உயிரிழந்த KT.ஹரிராம் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து பாஜக கட்சி சார்பில் 2 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார். மேலும்., அவரது குடும்பத்தினர் வழங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.