பஸ் கவிழ்ந்து 70 பேர் காயம்

விருத்தாசலம்: விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று நேற்று காலை கடலூர் மாவட்டம் சேப்பாக்கத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு மாணவர்கள் உள்பட 70 பயணிகளுடன் சென்றது. வேப்பூர் நெடுஞ்சாலையில் கோமங்கலம் அருகே, நெல் அறுவடை செய்யும் இயந்திர வாகனம் மோதுவது போல் வந்ததால் டிரைவர் பஸ்சை இடதுபுறமாக திருப்பியபோது, 10 அடி வாய்க்காலில் பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது. காயமடைந்த 70 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.