இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன்… குவியும் பாராட்டு!!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

இறுதிப்போட்டியானது இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசினர்.

இங்கிலாந்து அணியின் அதிகபட்ச தனிபர் ஸ்கோரே 19 தான். அந்த அளவுக்கு இந்திய அணி அதிரடி காட்டியது. இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சது, சோப்ரா, அர்ச்சனா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். அந்த அணியின் மெக்டொனால்ட் 19 ரன்கள் எடுத்தார்.

தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் ஷபாலி வர்மா 15 ரன்னிலும், ஸ்வேதா 5 ரன்னிலும் வெளியேறினர். அடுத்துவந்த சவுமியா திவாரி , த்ரிஷா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

த்ரிஷா 24 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 69 ரன்னை எடுத்தது. சவுமியா திவாரி 24 ரன்னுடனும், ஹிரிஷிதா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

முதல்முதலாக இந்த ஆண்டு யு 19 மகளிர் உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், முதல் போட்டியிலேயே இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.