“எச்சைப் பிழைப்பு”… விசிகவினருக்கு அண்ணாமலை கண்டனம்..! ஆரணி பரபர..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 8 ஆம் தேதி அன்று இடம் தொடர்பான புகாரில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த விசிக-வின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆரணி காவல் நிலைய சப் – இன்பெக்டரை ஒருமையில் பேசியதாக குற்றசாட்டு எழுந்தது. மேலும், பாஸ்கரன் சப்- இன்ஸ்பெக்டரின் சாதியை குறிப்பிட்டு ஒருமையில் பேசியதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில், அவரை கைது செய்த போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, நீதிமன்ற ஜாமீனில் வெளிவந்த அவரை கட்சி ஆதரவாளர்கள் ஆரணி பகுதியில் ஊர்வலமாக காரில் அழைத்து வந்தனர். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், காவலர்களை பார்த்து கேவலமாக கோஷமிட்டபடி சென்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாதாவ்து;

காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், “காவல் நாய்களே”, “எச்சைப் பிழைப்பு”, போன்ற கோஷங்களை எழுப்புவது காக்கி சட்டைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்பதை இதுபோன்ற அரசியல் கட்சிகள் உணர வேண்டும்.

ஓரிரு காவலர்கள் செய்யும் தவறுகளுக்கு, ஒட்டு மொத்த காவல்துறையினரை அவதூறாகப் பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. தங்களது உயிரை துச்சமாகக் கருதி, மக்களை காக்க உழைக்கும் காவல்துறையினரை, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், அரசியல் காரணங்களுக்கும், இது போன்று அவதூறாகப் பேசுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

காவல்துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில் கோஷங்களை எழுப்பும் தங்களது கூட்டணி கட்சியினர் மேல், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.