பொதுத்தேர்வு ரிசல்ட் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அப்டேட்

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டதை அடுத்து தற்போது முடிவுகள் வெளியாகும் தேதிகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். அந்த வகையில் 12 ஆம் வகுப்பிற்க்கான முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியிடப்படும். 

அதேபோல் 11 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் மே 19 ஆம் தேதி அறிவிக்கப்படும். மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் மே 17 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?
இதற்கிடையில் 12 ம் வகுப்பு
பொது தேர்வு இந்த ஆண்டு மார்ச் மாதம்  13 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ம் தேதி முடிவடைய இருப்பதாகவும் இந்த தேர்வு 7600 பள்ளிகளில் படிக்க கூடிய 8.80 லட்சம் மாணவ மாணவிகள் 3169 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

அதேபோல் 11 ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 14 ம் தேதி துவங்கி ஏப்ரல் 5 ம் தேதிவரை நடைபெற இருப்பதாகவும் இந்த தேர்வு 7600 பள்ளிகளில் பயிலும் 8.50 லட்சம் மாணவ மாணவிகள் 3169 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், ஏப்ரல் 6 ம் தேதி துவங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது இதை தமிழகத்தில் 12800 பள்ளிகளில் பயிலும் 10 லட்சம் மாணவ மாணவிகள் 3986 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

மறுபுறம் செய்முறை தேர்வுகள் பிப்ரவரி முதல்வர் வாரத்தில் தொடங்கி மார்ச் இரண்டாம் வாரத்திற்கு முடிவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.