Google நிறுவனத்தை பயமுறுத்தும் ChatGPT! என்ன செயலி இது? உங்களின் கேள்விகளுக்கான பதில்கள்!

ChatGpt என்றால் என்ன? அதன் பயன் என்ன?
இது ஒரு செயற்கை நுண்ணறிவு கருவி ஆகும். இது பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் ஒரு செயற்கை அறிவு உள்ள ஒரு கருவி ஆகும்.ChatGPT மூலமாக என்ன செய்யலாம்?
இது ஒரு Google போன்ற தேடல் செயலி என்றாலும் இதில் நாம் ஏதாவது ஒரு விஷயத்தை தேடினால் மனிதர்கள் தெரிவிப்பது போன்ற பதில்களை ஒரே வரியில் தெரிவிக்கும். இதற்காக அது பல வித தேடல்களை தானாகவே செய்து நமக்கு ஒரே ஒரு உண்மையான பதிலை அளிக்கும்.ChatGPT நமது வேலையே எளிதாக்குமா?
நிச்சயமாக இது உங்களின் வேலையே சுலபமாக மாற்றும். Google செயலி போல பல விவரங்கள் இல்லாமல் அவற்றை எல்லாம் இது தானாகவே ஆராய்ந்து நமக்கு தேவையான பதிலை மட்டுமே அளிக்கும்.ChatGPT எதற்கெல்லாம் பதில் தரும்?
இது உங்களின் கேள்விகளுக்கு பதில், ஒரு கதையின் விளக்கம், மொழி மாற்றம், தனியாக கதை எழுதுதல், தனியாக இசை அமைத்தல், தானாகவே அனைத்தும் செய்யும் திறன் போன்ற மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யும்.ChatGPT மாணவர்களுக்கு எப்படி பயன்படுகிறது?
மாணவர்கள் இதை வைத்து தானாகவே அவர்களின் வீட்டு பாடங்களை முடிக்கிறார்கள். இதற்காக அவர்களின் ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் உதவி எதுவும் தேவைப்படுவதில்லை. இதன்காரணமாகவே தற்போது பல நாட்டில் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இதற்கு தடை கோருகின்றன.ஏன் ChatGPT தடை கோரிக்கை எழுகிறது?
மாணவர்கள் முதல் பலர் இந்த ChatGPT பயன்படுத்தி அவர்களின் வேலைகளை செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு தனிப்பட்ட அறிவு எதுவும் வளராது. எதுவும் தெரியாமல் அனைத்திற்க்கும் இந்த ChatGPT போன்றவற்றையே மனிதர்கள் சார்ந்திருப்பார்கள். இது மிகவும் ஆபத்தாக முடியும்.ChatGPT போலியான செய்தி கூறுகிறதா?
இது உண்மை செய்திகள் கூறினாலும் சில விஷயங்களுக்கு கட்டாயம் பதில் கூறவேண்டிய காரணத்தால் போலியான சில தகவல்களை கூறுகிறது.Google நிறுவனத்திற்கு இதனால் பாதிப்பா?
ஆம், இப்போது உலகில் நம்பர் 1 தேடல் செயலியாக Google இருந்துவருகிறது. ஆனால் அதைவிட சுலபமாக நமக்கு பதில் தரும் ChatGPT போன்றவை பிரபலமானால் Google நிறுவனம் அதனால் கடுமையாக பாதிக்கப்படும்.ChatGPT அறிவை பாதிக்குமா?
உலகம் என்பது எப்போதும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் இயங்குகிறது. ஆனால் இதுபோன்ற AI செயலி மனிதர்களின் அறிவு திறனை குறைக்கக்கூடியது. இதனால் மனிதர்கள் சிந்திக்காமல் போகலாம். மனித மூளை அறிவாற்றலே உலகிற்கு தேவை. இதனால் அறிவாற்றல் என்பது இல்லாமலே போகும்.ChatGPT பயன்படுத்த எங்கு சென்று தேடலாம்?
இதை உருவாக்கிவரும் Open AI நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் சென்றால் நமக்கு ChatGPT பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.