அவுஸ்திரேலியாவை அலறவிட்ட கதிரியக்க காப்ஸ்யூல் கண்டுபிடிப்பு! பொதுமக்கள் நிம்மதி


மேற்கு அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் காணாமல் போன சிறிய கதிரியக்க காப்ஸ்யூலை கண்டுபிடித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கதிரியக்க காப்ஸ்யூல்

சுரங்க நிறுவனமான ரியோ டிண்டோ அவுஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களில் நிலக்கரி உள்பட பல்வேறு கனிமங்கள் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

சுரங்க பணியின்போது கனிமத்தின் தன்மையை அளவிடும் கருவியில் சிறிய அளவிலான கதிரியக்க காப்ஸ்யூல் பயன்படுத்தப்படுகிறது. அந்த குப்பியில் சிறிய அளவில் சிசியம் -137 என்ற தனிமம் உள்ளது.

அவுஸ்திரேலியாவை அலறவிட்ட கதிரியக்க காப்ஸ்யூல் கண்டுபிடிப்பு! பொதுமக்கள் நிம்மதி | Australia Missing Radioactive Capsule FoundTelegraph

இந்த தனிமம் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும், மனிதர்கள், பிற உயிரிழினங்களில் தோலில்பட்டால் பாதிப்பு மட்டுமின்றி தீக்காயம் ஏற்படும். இந்த கதிரியக்க காப்ஸ்யூலிருந்து கதிரிக்கம் வெளியானால் கேன்சர் கூட வரலாம். 

மிகப்பெரிய தேடுதல்

8 மில்லிமீற்றர் நீளமும், 6 மில்லிமீற்றர் சுற்றவும் கொண்ட இந்த காப்ஸ்யூல், கடந்த மாதம் 12-ஆம் திகதி மேற்கு அவுஸ்திரேலியாவின் பில்பெராவில் சுரங்கப்பகுதியில் இருந்து 1,400 கிலோட்டர் தொலையில் வடமேற்கே பெர்த் நகரில் உள்ள ரியோ டிண்டோ கனிம நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கிற்கு சரக்கு லொறி மூலம் எடுத்துச் செல்லப்பட்டபோது, வழியில் காணாமல் போனது.

அவுஸ்திரேலியாவை அலறவிட்ட கதிரியக்க காப்ஸ்யூல் கண்டுபிடிப்பு! பொதுமக்கள் நிம்மதி | Australia Missing Radioactive Capsule FoundGOVERNMENT OF WESTERN AUSTRALIA

பின்னர், இது குறித்து அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அணு சக்தி துறை விஞ்ஞானிகள், அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

வெறும் நாணய ளவில் மட்டுமே இருக்கும் இந்த ஒற்றை காப்சூலை தேடும்பணி அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய தேடுதலாக பார்க்கப்பட்டது.

கண்டுபிடிப்பு

இந்நிலையில், அதிதீவிர தேடுதலுக்கு பின் மாயமான கதிரியக்க குப்பி இன்று, பில்பெராவி நகரத்தில் நியூமென் என்ற சிறிய கிராமத்தின் அருகே வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவை அலறவிட்ட கதிரியக்க காப்ஸ்யூல் கண்டுபிடிப்பு! பொதுமக்கள் நிம்மதி | Australia Missing Radioactive Capsule FoundReuters

இதையடுத்து அந்த கதிரியக்க குப்பியை கைப்பற்றிய மீட்புக்குழுவினர் குப்பியை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். கதிரியக்க குப்பியால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலியாவை மட்டுமின்றி உலகையே அலறவிட்ட சிறிய கதிரியக்க குப்பி பலநாட்கள் நீண்ட தேடுதலுக்கு பின் இன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவுஸ்திரேலிய அரசு, விஞ்ஞானிகள், தேடுதல் குழுவினர் பொதுமக்கள் மிகுந்த நிம்மதியடைந்துள்ளனர்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.