Jio 5G இப்போது தமிழகத்தில் மேலும் 8 நகரங்களில் அறிமுகம்!

டிஜிட்டல் துறையில் புதிய ஒரு வளர்ச்சியாக 5G இணைய சேவை கடந்த ஆண்டு அக்டோபர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 5G சேவையை இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்கள் வழங்குகின்றன.

அதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை பொறுத்தவரை இந்த 5G சேவை என்பது இந்தியாவில் 2023 டிசம்பர் மாதத்திற்குள் முழுவதும் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. அதில் ஏற்கனவே இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் 5G சேவை மூலம் இணைத்துவிட்டது.

தற்போது 2ஆம் கட்ட நகரங்களுக்கு இந்த சேவை படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டுவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை முக்கிய நகரங்களாக இருக்கக்கூடிய சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களில் ஏற்கனவே இந்த 5G சேவை அறிமுகம் ஆகிவிட்டது.

தற்போது புதிய அறிமுகமாக தமிழகத்தின் 8 நகரங்கள் இந்த 5G சேவைக்கு மாறியுள்ளன. அதில் திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகர்கோவில், கும்பகோணம், கரூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர் ஆகிய நகரங்கள் புதிய 5G சேவைக்கு மாறியுள்ளன.

இதனால் இனி இந்த நகரங்களில் வசிக்கும் மக்கள் 5G ஸ்மார்ட்போன்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு இந்த 5G சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். இந்த Jio True 5G பயன்படுத்த அவர்களுக்கு Jio 5G Welcome Offer கிடைக்கவேண்டும்.

அது கிடைத்ததும் அவர்களால் 5G இணையவேகமான 1GBPS வேகத்தில் இணையத்தை பயன்படுத்தமுடியும். இதேபோல ஏர்டெல் நிறுவனமும் இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் 5G இணைய சேவையை அறிமுகம் செய்துவருகிறது.

ஏர்டெல் நிறுவனம் வரும் 2024 மார்ச் மாத இறுதிக்குள் இந்தியா முழுவதும் உண்மையான 5G சேவையை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இரு டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே 5G சேவையை இந்தியாவில் வழங்குகின்றன. இதைத்தவிர Vi மற்றும் BSNL ஆகிய நிறுவனங்கள் விரைவில் 5G சேவை அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.