“ஆர்ட் ஒப் ஸ்ரீலங்கா” ஓவியக் கண்காட்சி பெப்ரவரி 10 ஆம் திகதி வரை நடைபெறும்

75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட “ஆர்ட் ஒப் ஸ்ரீ லங்கா” (Art of srilanka) ஓவியக் கண்காட்சியை இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் (Poj Harnpol) கொழும்பு 07 இல் அமைந்துள்ள கட்புல ,அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் ஜே.டி.ஏ. பெரேரா கலையரங்கில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய மற்றும் திறமையான கலைஞர்களின் பங்களிப்புடன் நாட்டின் பெருமையை பறைசாற்றும் இந்த ஓவியக் கண்காட்சியை பிரபல ஓவியக் கலைஞர் எச். எஸ் சரத் ஏற்பாடு செய்திருந்தார்.

எதிர்பார்த்தது போலவே நாடு முழுவதும் இருந்து ஏராளமான இளம் மற்றும் மூத்த ஓவியர்கள் இந்த ஓவியக் கண்காட்சிக்காக தமது ஓவியங்களை சமர்ப்பித்திருந்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவுதிகளும் அவர்களுள் அடங்குவதாக கண்காட்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரபல ஓவியக் கலைஞர் எச்.எஎஸ்.சரத் தெரிவித்தார்.

கடந்த 04 ஆம் திகதி ஆரம்பமான இந்தக் ஓவியக் கண்காட்சியை பெப்ரவரி 10ஆம் திகதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் கொழும்பு 07 இல் அமைந்துள்ள கட்புல ,அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் ஜே.டி.ஏ. பெரேரா கலையரங்கில் பார்வையிட முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.