திருமண நிகழ்ச்சிக்கு சென்ற படகு: நடுக்கடலில் கவிழ்ந்ததில் 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!


ஏமனில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற படகு ஒன்று நீரில் கவிழ்ந்ததில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கர விபத்து

ஏமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுக நகரான ஹொடைடாவின் குடிமக்கள், செங்கடலில் அமைந்துள்ள கமரன் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படகில் சென்று கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில், பெண்கள், சிறுவர்கள் என படகில் பயணித்த 27 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற படகு: நடுக்கடலில் கவிழ்ந்ததில் 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! | At Least 21 People Drowned In Shipwreck Off YemenAFP

இறுதியில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் இறங்கினர்.

21 பேர் உயிரிழப்பு

27 பேர் படகில் பயணித்த நிலையில், 12 பெண்கள், 7 சிறுவர்கள் மற்றும் 2 ஆண்கள் என 21 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

விசாரணையில் கடலில் வீசிய பலத்த காற்று விபத்துக்கு காரணமாக இருந்து இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற படகு: நடுக்கடலில் கவிழ்ந்ததில் 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! | At Least 21 People Drowned In Shipwreck Off Yemen



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.