மக்களே உஷார்! 126 நாட்களுக்குப் பிறகு அதிக அளவில் கொரோனா பாதிப்பு

India Covid Cases: மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 126 நாட்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று இந்தியாவில் ஒற்றை நாளில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 800 ஐத் தாண்டியுள்ளது. அதே நேரத்தில் செயலில் உள்ள எண்ணிக்கை 5,389 ஆக உயர்ந்துள்ளது. 843 புதிய நோய்த்தொற்றுகளுடன், நாட்டின் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக (4,46,94,349) அதிகரித்துள்ளது. நான்கு பேர் பலியானதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,799 ஆக உயர்ந்தது. இந்த தரவு காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்டது. 

ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவரும், இரண்டு பேர் கேரளா மாநிலதில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது மொத்த நோய்த்தொற்று சராசரி 0.01 சதவிகிதமாக உள்ளது. தேசிய கோவிட்-19 மீட்பு விகிதம் 98.80 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்த கொரோனா நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,58,161 ஆக உயர்ந்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் 220.64 கோடி பேருக்கு கோவிட்-19 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த வாரத்தில் (மார்ச் 9- மார்ச் 15), நாடு முழுவதும் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கோவிட் நேர்மறை விகிதங்கள் 10 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

உத்தரகண்டில் உள்ள பித்தோராகர், 40 பவர் சதவீதம் என்ற அதிகபட்ச நேர்மறை விகிதத்தைப் பதிவுசெய்துள்ளது. அதைத் தொடர்ந்து ரத்லம் (18.18 சதவீதம்), தார் (14.29 சதவீதம்) மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நீமுச் (11.11 சதவீதம்); இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி (15.04 சதவீதம்), சிம்லா (14.84 சதவீதம்) மற்றும் சோலன் (12.91 சதவீதம்); குஜராத்தில் பொடாட் (14.29 சதவீதம்); மற்றும் ராஜஸ்தானில் துங்கர்பூர் (10 சதவீதம்) என சுகாதார அமைச்சக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய 23 மாவட்டங்களில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை நேர்மறை விகிதங்கள் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்களில், அதிக எண்ணிக்கையிலான தொற்று பதிப்பு பதிவாகியுள்ளன. கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இடர் மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றுமாறு மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் இந்த மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.