மூன்றாம் கூட்டணி மும்முரம்; ஏழு முதல்வர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்.!

2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியாக 7 மாநில முதல்வர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். எதிர்கட்சிகளிடையே ஒற்றுமையை மேம்படுத்தவும், பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத முதல்வர்களின் கூட்டமைப்பை உருவாக்கவும் அவர் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

2014ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத்திய அரசுக்கும் அதன் பிரதிநிதியான லெப்டினன்ட் கவர்னருக்கும் எதிராகப் போராடி வரும் டெல்லி முதல்வர், இதே போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசை எதிர்த்துப் போராடும் “முதலமைச்சர்களின் முற்போக்குக் குழுவை” உருவாக்க 7 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளாவின் பினராயி விஜயன், தமிழகத்தைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் சோரன் மற்றும் உள்ளிட்ட பலருக்கு டெல்லி முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும், அழைக்கப்பட்டவர்களில் ஒருவரான தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி, நிராகரித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்திய ஆண்டுகளில், தெலங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு முதன்முதலில் அழுத்தம் கொடுத்தார். ஆனால் மற்ற கட்சிகளின் மந்தமான பதிலைக் கருத்தில் கொண்டு தனது முயற்சிகளை கைவிட்டதாகத் தெரிகிறது. தற்போது கட்சியை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த மாதம் அவரின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, தேசிய பாரத ராஷ்டிர சமிதியாக மாறியபோது கலந்துகொண்ட சிலரில் திரு கெஜ்ரிவாலும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது. பீகார் மற்றும் வங்காள அரசாங்கங்களின் ஆதாரங்களும் அரவிந்த் கெஜ்ரிவாலின் அழைப்பை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் குறித்து டெல்லி முதல்வர் அலுவலகம் இன்னும் பதிலளிக்கவில்லை.

வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 2019ல் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலையீட்டாளர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் 2024 பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட விரும்புவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

இரண்டாவது முறையாக பாஜகவில் இருந்து பிரிந்து தலைமைப் பொறுப்பை ஏற்ற பீகாரின் நிதிஷ் குமார், பிரதமர் பதவியைத் விரும்பவில்லை என்று வலியுறுத்தியுள்ளார். அவரது துணைத்தலைவர் தேஜஸ்வி யாதவ், “அவரும் (நிதீஷ் குமாரும்) பிரதமராக விரும்பவில்லை, நானும் முதல்வராகவும் விரும்பவில்லை. நாங்கள் இருக்கும் இடத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

XBB.1.16 கொரோனா வைரஸ்: இந்தியாவில் மீண்டும் அலறவிடும் பாதிப்பு!

கூட்டணியில் தலைமைப் பதவியை நாடாமல், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயார் என காங்கிரஸ் அறிவித்திருந்தாலும், 2024-ஆம் ஆண்டுக்கான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்பது நீண்ட சோதனைகளுக்கு உள்ளாகும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.