கழுத்தை நெருக்கும் வறட்சி..!உணவு பஞ்சத்தால் உயிரிழந்த 43,000 பேர்: வேதனையில் 5 மில்லியன் மக்கள்


கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிலவிவரும் கடுமையான வறட்சியால் கடந்த ஆண்டு 43,000 பேர் உயிரிழந்து இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

43 பேர் உயிரிழப்பு

சோமாலியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக நீண்ட வறட்சியால் சுமார் 43,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அதில் பாதி பேர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருக்கலாம் என்றும் அறிக்கைகள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் இந்த நெருக்கடி இன்னும் நீண்ட தொலைவில் உள்ளது என ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிறுவனம், உலக சுகாதார அமைப்பு மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் இணைந்து திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழுத்தை நெருக்கும் வறட்சி..!உணவு பஞ்சத்தால் உயிரிழந்த 43,000 பேர்: வேதனையில் 5 மில்லியன் மக்கள் | Somalia Drought 43000 Deaths HungerAP

சோமாலியா மற்றும் அண்டை நாடுகளான எத்தியோப்பியா மற்றும் கென்யா ஆகிய நாடுகள் தொடர்ந்து ஆறாவது முறையாக தோல்வியுற்ற மழைக்காலத்தை எதிர்கொள்வதால் இந்த மிகப்பெரிய அளவிலான உணவு பஞ்சம் தலையெடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் உலக அளவில் அதிகரித்து வரும் உணவு பொருட்களின் விலை மற்றும் உக்ரைன் ரஷ்யா போர் ஆகியவை ஆப்பிரிக்க நாடுகளில் பசி நெருக்கடியை சிக்கலாக்குகிறது.

கழுத்தை நெருக்கும் வறட்சி..!உணவு பஞ்சத்தால் உயிரிழந்த 43,000 பேர்: வேதனையில் 5 மில்லியன் மக்கள் | Somalia Drought 43000 Deaths HungerAP

இந்த ஆண்டில்?

வறண்ட பஞ்சம் மற்றும் உணவு போதாமையால் ஆகிய காரணங்களால் சுமார் 5 மில்லியன் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

இவற்றில் 2 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த  ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் குறைந்தது 18,000 பேர் மற்றும் 34,000 பேர் இறப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கழுத்தை நெருக்கும் வறட்சி..!உணவு பஞ்சத்தால் உயிரிழந்த 43,000 பேர்: வேதனையில் 5 மில்லியன் மக்கள் | Somalia Drought 43000 Deaths HungerAP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.