பிரபல ‘ஹாரி பாட்டர்’ நடிகர் மரணம்.! சோகத்தில் ரசிகர்கள்.!

1966-ம் ஆண்டு மரபணுக் கோளாறால் உயரம் குறைவாக பிறந்தவர் நடிகர் பால் கிராண்ட். இவர், ‘ஸ்டார் வார்ஸ்: ரிட்டர்ன் ஆஃப் தி ஜெடி’ மற்றும் ‘ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன்’ ஆகிய படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானார். மேலும் ‘லெஜண்ட்’, ‘லாபிரிந்த்’, ‘வில்லோ’ மற்றும் ‘தி டெட்’ ஆகிய படங்களிலும் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு வெளியே ஹாலிவுட் நடிகர் பால் கிராண்ட் மயக்க நிலையில் விழுந்தார். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிகிச்சைகாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதுள்ளது. இவருடைய திடீர் மறைவு ஹாலிவுட் திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து அவரது மகள் சோபி ஜெயின் கிராண்ட் கூறுகையில், ‘என்னுடைய மனம் உடைந்துவிட்டது. எந்தப் பெண்ணும் தங்கள் அப்பாவை அழைத்துச் செல்ல தகுதியற்றவர்… அவர் மிகவும் நன்கு அறியப்பட்டவர் மற்றும் நேசிக்கப்பட்டார். அவர் சீக்கிரம் சென்றுவிட்டார்’ என்றார். 4 அடி 4 இன்ச் உயரமுள்ள பால் கிராண்டுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.