லண்டனில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: டில்லி போலீசார் வழக்கு| Delhi Cops Register Case Over Attack On Indian High Commission In London

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்திய தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில், டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகே, மார்ச் 19 ல் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். காலிஸ்தான் ஆதரவு கொடியுடன் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கிற்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர்.

அப்போது தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த மூவர்ண கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தினர். இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

இது தொடர்பாக விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை பெற்று உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படி டில்லி போலீசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது.

latest tamil news

இதன்படி, ஐபிசி சட்டத்தின்படி, சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுச்சொத்து சேதம் தடுப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.