மைதானத்தில் சிக்ஸர் மழை! டி20 வரலாற்றில் 19 ஓவரில் 258 ஓட்டங்கள் சேஸிங்..அதிர்ந்த கிரிக்கெட் உலகம்


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 18.5 ஓவரில் 258 ஓட்டங்கள் இலக்கை எட்டி இமாலய சாதனை படைத்துள்ளது.

இமாலய ஸ்கோர்

மேற்கிந்திய தீவுகள் – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 258 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக சார்லஸ் 46 பந்துகளில் 118 ஓட்டங்கள் விளாசினார். மேயர்ஸ் 27 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்தார்.

சார்லஸ்/Charles @AP

சார்லஸ்/Charles 

சிக்ஸர் மழை

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியில் டி காக் மற்றும் ஹென்ரிக்ஸ் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர்.

சதம் விளாசிய டி காக் 44 பந்துகளில் 100 ஓட்டங்களும், ஹென்ரிக்ஸ் 28 பந்துகளில் 68 ஓட்டங்களும் விளாசினர்.

டி காக்/De Kock @Phill Magakoe/AFP/Getty Images

டி காக்/De Kock @AFP

சரித்திர வெற்றி

இறுதி கட்டத்தில் கேப்டன் மார்க்ரம் அதிரடியாக 38 ஓட்டங்கள் விளாச, 18.5 ஓவரிலேயே தென் ஆப்பிரிக்கா 259 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இரு அணிகளும் சேர்த்து 517 ஓட்டங்கள் எடுத்துள்ளன. டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி செய்த மிகப்பெரிய சேஸிங் இதுவாகும்.  

மைதானத்தில் சிக்ஸர் மழை! டி20 வரலாற்றில் 19 ஓவரில் 258 ஓட்டங்கள் சேஸிங்..அதிர்ந்த கிரிக்கெட் உலகம் | Sa Chase 259 Vs Wi T20 World Record @AFP

மைதானத்தில் சிக்ஸர் மழை! டி20 வரலாற்றில் 19 ஓவரில் 258 ஓட்டங்கள் சேஸிங்..அதிர்ந்த கிரிக்கெட் உலகம் | Sa Chase 259 Vs Wi T20 World Record @Twitter



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.