சட்டப்பேரவையில் கண்ணீர் மல்க முதல்வருக்கு கோரிக்கை வைத்த துரைமுருகன்..!!

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசி அமைச்சர் துரைமுருகன், கேள்வி கேட்பதும், வெட்டுத்தீர்மானம் கொடுப்பது. வெட்டி தீர்மானங்கள் கொடுப்பாதக அல்ல, அது அனைத்து உறுப்பினர்களின் கடமை என்றும் அவ்வாறு வெட்டு தீர்மானங்கள் கொடுத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 1989 ஆம் ஆண்டில் இருந்து நீர்வளத்துறையில் எத்தனை முறை பேசி இருப்பேன் என்றும் எவ்வளவு கேள்விகளுக்கு பதில் அளித்திருப்பேன் என்று தனக்கு தெரியாது என்று கூறிய துரைமுருகன், மூத்தவன் என்ற முறையில் கலைஞர் என்ன துறை வேண்டும் என்று தன்னிடம் கேட்டபோது, குடியானவர்களுக்கும், விவசாயிகளுக்கும் எதாவது செய்யமுடியும் என்றால் அதற்கு நீர்வளத்துறை தான் வேண்டும் என்று கலைஞரிடம் தெரிவித்தாக துரைமுருகன் கூறினார். மேலும், பொதுப்பணித்துறை போன்று பெயர் இருக்காதே என்று கலைஞர் சொன்னபோது பெயர் எதற்கு என்று குடியானவர்களுக்கு எதாவது செய்தால் போதும் என்று கூறினேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன்,1 பைசா மின்கட்டண உயர்வை கண்டித்து பெருமாநல்லூர் போராட்டம் நடந்த நிலையில், கலைஞர் இனி ஒரு பேசா கூட மின்கட்டணமாக விவசாயிகள் செலுத்தவேண்டியதில்லை என்று கூறிய அதற்கான பணிகளை தன்னிடம் ஒப்படைத்து நிறைவேற்றப்பட்டதற்கு கலைஞருக்கு நன்றி தெரிவிப்பதாவும் அவர் தெரிவித்தார்.

 எல்லோருக்கும் மறைவு வரும், அப்படி தான் மறையும் போது தனது சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று எழுதவேண்டும்; அது போதும் என்று உருவாக்கமாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, நீங்கள் நூறு வருடம் வாழவேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேனீர் விருந்தில் ஆளுநர் எவ்வளது வயது தனக்கு என்று முதலமைச்சரிடம் கேட்டபோது என் அப்பாவுடன் இருந்தவர் என்று பெருமையாக கூறியதாவும், அப்போது தான் உதயாவின் மகனுடனும் நான் இருப்பேன் என்று தெரிவித்தாக துரைமுருகன் கூறினார். மூத்த உறுப்பினர் என்ற முறையில் எதிர்கட்சி உறுப்பினர்களும் தனக்கு தரும் மரியாதைக்கு அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.