ஜேர்மனியின் புதிய குடியேற்றத் திட்டம்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத 60,000 தொழிலாளர்களுக்கு வாய்ப்பு


ஜேர்மனியில் குடியேறுபவர்களுக்கு உள்ள முக்கிய தடைகளை தீர்க்கும் புதிய குடியேற்ற திட்டத்தை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

புதிய குடியேற்ற வரைவு சட்டம்

ஜேர்மனி குடியேற்றம், திறன் பயிற்சி மற்றும் குடியேற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய வரைவு சீர்திருத்தங்களை ஜேர்மனி அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஜேர்மனிக்கு குடியேறுபவர்களுக்கு, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு(EU) வெளியே இருந்து வருபவர்களுக்கு இருக்கும் முக்கிய தடைகளை இந்த புதிய வரைவு தீர்க்கும்.

இது தொடர்பாக ஜேர்மனியின் நிதியமைச்சர் கிறிஸ்டியன் லின்ட்னர் பதிவிட்டுள்ள ட்வீட்-டில், இடம்பெயர்வு கொள்கையில் ஒரு புதிய தொடக்கத்திற்கான அடித்தளத்தை நாங்கள் அமைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் புதிய குடியேற்றத் திட்டம்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத 60,000 தொழிலாளர்களுக்கு வாய்ப்பு | Germany Immigration Reform Plan Workers Outside EuReuters

அத்துடன் “திறமையான தொழிலாளியாக நாட்டின் பொருளாதார வெற்றிக்கு பங்களிக்கக்கூடிய எவரும் வரவேற்கப்படுவார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சீர்திருத்தங்களை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே உள்ள நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 60,000 நபர்களாக அதிகரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் புதிய குடியேற்றத் திட்டம்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத 60,000 தொழிலாளர்களுக்கு வாய்ப்பு | Germany Immigration Reform Plan Workers Outside EuSean Pavone | Dreamstime.com

மூன்று வழிகள்

ஜேர்மனியின் புதிய குடியேற்ற வரைவு சட்டத்தின் படி, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு மூன்று வழிகளை வழங்குகிறார்கள்.

முதலாவது, ஜேர்மனியில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை அல்லது பல்கலைக்கழக பட்டம் மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தம், தொடர்புடைய துறையில் பணிபுரிந்த குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது முறைகளாக, வேலைவாய்ப்பு இல்லாத ஆனால் வேலை தேட விரும்பும் நபர்களுக்கான புதிய “வாய்ப்பு அட்டை” வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. 

ஜேர்மனியின் புதிய குடியேற்றத் திட்டம்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத 60,000 தொழிலாளர்களுக்கு வாய்ப்பு | Germany Immigration Reform Plan Workers Outside Eu



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.