தஹி வேண்டாம்… தயிர் ராகுல் காந்தி ஓகே… பிளேட்டை திருப்பும் பாஜக- வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வானொலி, பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு முன்னெடுத்து வரும் நிகழ்வுகள் அவ்வப்போது சர்ச்சையாகி வருகின்றன. இந்த சூழலில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin) தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் தயிர் பாக்கெட்களில் தஹி (Dahi) எனப்படும் இந்தி வார்த்தையை பயன்படுத்த FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தி திணிப்பு

அதுவும் இந்தி வார்த்தையை தமிழ் மொழியில் பயன்படுத்தி விட்டு, அருகில் அடைப்பு குறிக்குள் ‘தயிர்’ என தமிழ் வார்த்தையை பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஆவின் மட்டுமின்றி, கர்நாடகாவில் நந்தினி, கேரளாவில் மில்மா ஆகிய பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் இதேபோல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வலுக்கும் கண்டனம்

இந்நிலையில் இந்தி நேரடியாக வந்தால் மட்டுமல்ல, தமிழ் வடிவில் வந்தாலும் ஏற்க மாட்டோம் எனக் கூறி பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக முதல்வர்

தனது ட்விட்டரில், எங்கள் தாய்மொழியைத் தள்ளி வைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்.

முதல்வர் எதிர்ப்பு

மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition குழந்தையைக் கிள்ளி விட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள் எனப் பதிவிட்டார். மேலும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறுகையில், இந்தியில் தஹி என அச்சிட மாட்டோம். தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு எதிரானது.

கிராமத்து சமையல்

இந்தியை சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தி கிராமத்து சமையல் யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அதில், அவர் சமையலில் ஈடுபட்டு தயிர், கல் உப்பு என பேசியிருந்தார்.

ராகுல் காந்தி பேச்சு

தயிரில் இந்தி திணிப்பு விவகாரம் தான் தற்போது சூடுபிடித்துள்ளது. எனவே ராகுலின் வீடியோவை சுட்டிக் காட்டி, தஹி மோடி வேண்டாம். தயிர் ராகுல் காந்தி தான் வேண்டும் என அரசியல் சூட்டை கிளப்பும் வகையில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தை திசை திருப்பும் வேலையில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.

எதை செய்தால் மக்களிடம் வேகமாக பரவும் என நன்கு அறிந்து, தயிர் விவகாரத்தில் இறங்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதேபோல் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்ததை பற்றிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் இவ்வாறு திசை திருப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.