பிரித்தானிய பிரதமர் ரிஷியின் மனைவி தொடர்பில் மீண்டும் ஒரு சர்ச்சை… விசாரணை மேற்கொள்ள கோரிக்கை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி மீண்டும் ஒருமுறை பண விடயத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். அது தொடர்பான விடயம் ஒன்றை மறைத்ததாக ரிஷி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு பணத்தில் நன்மை பெறும் அமைப்புடன் தொடர்பு

சமீபத்தில், பிரித்தானிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், குழந்தைகள் நலன் அமைப்புகளுக்கான உதவித்தொகை சில நிபந்தனைகளுக்கு உட்படும் நிலையில் இரட்டிப்பாக்கப்படுவதாக அறிவித்திருந்தார் சேன்ஸலர் ஜெரமி ஹண்ட்.

குழந்தைகள் நல அமைப்பான Koru Kids என்னும் அமைப்பில் பிரதமர் ரிஷியின் மனைவியான அக்‌ஷதா மூர்த்தி பங்குதாரராக உள்ளார்.

பிரித்தானிய பிரதமர் ரிஷியின் மனைவி தொடர்பில் மீண்டும் ஒரு சர்ச்சை... விசாரணை மேற்கொள்ள கோரிக்கை | Controversy British Prime Minister Rishi S Wife

Image: PA

ஆகவே, பிரதமர் அறிவித்த விடயம் ஒன்றின் மூலம், அவரது குடும்பத்துக்கே கூடுதல் இலாபம் பெறுகிறதா என்பதைக் குறித்து ரிஷி பதிலளிக்கவேண்டுமென லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியின் துணை தலைவரான Wendy Chamberlain கோரியுள்ளார்.
 
விசாரணை மேற்கொள்ள கோரிக்கை

இது குறித்து பிரதமரின் ஆலோசகரான Sir Laurie Magnus விசாரணை மேற்கொள்ளவேண்டும் என Wendy வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், லேபர் கட்சியினரும் இது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

பிரித்தானிய பிரதமர் ரிஷியின் மனைவி தொடர்பில் மீண்டும் ஒரு சர்ச்சை... விசாரணை மேற்கொள்ள கோரிக்கை | Controversy British Prime Minister Rishi S Wife

Image: @anmurty/Twitter

ஆனால், பிரதமர் மீது விசாரணை நடத்த Sir Laurie Magnusக்கு அதிகாரம் கிடையாது.

பிரதமர் மீது அவர் விசாரணை நடத்த, பிரதமரிடமே அவர் அனுமதி பெறவேண்டும் என்னும் விதி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிரித்தானிய பிரதமர் ரிஷியின் மனைவி தொடர்பில் மீண்டும் ஒரு சர்ச்சை... விசாரணை மேற்கொள்ள கோரிக்கை | Controversy British Prime Minister Rishi S Wife

Image: PRU/AFP via Getty Images

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.