சீன கடன் நிறுவனங்களின் ரூ.106 கோடி சொத்து முடக்கம்| 106 crore assets of Chinese credit institutions have been frozen

பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மொபைல் போன் செயலி வாயிலாக, நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த ரேசர்பே, காஷ்பே, பேயு, ஈஸிபஸ் ஆகிய கடன் நிறுவனங்கள், பொது மக்களுக்கு கடன் வழங்கி வந்தன.

இந்த கடனுக்கு அதிக வட்டி வசூல் செய்யப்பட்டதுடன், கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்கு மிரட்டலும், தொல்லையும் கொடுக்கப்பட்டன.

இது குறித்து, 2019ல் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது சீன நிறுவனங்கள், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததால், வழக்கு விசாரணை அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், சீன கடன் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததால், பெங்களூரில் உள்ள அந்நிறுவனங்களுக்கு சொந்தமான 106 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, நேற்று முன்தினம் அமலாக்கத் துறையினர் முடக்கி உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.